புதுக்கோட்டையில் மழை
இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று லேசான மழை பெய்தது
Update: 2023-12-21 08:27 GMT
புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், விராலிமலை, கீரனூர், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாமல் மேக கூட்டங்களுடன் இருந்த நிலையில், தற்போது லேசாக மழை பெய்து வருகிறது. மேலும் மழையுடன் பணியும் கலந்துள்ளதால், குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் அநேக பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த மழையினால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என தெரிய வருகிறது.