தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் தேக்கம்

காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி;

Update: 2024-06-14 06:07 GMT

மழைநீர் தேக்கம்

காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூல அலுவலகம், தீயணைப்பு நிலையம், பொதுப்பணித்துறை, இ - சேவை மையம் அமைந்துள்ள வளாகத்தில், சாலை வசதி இல்லாமல் மண் சாலையாக உள்ளது. இப்பகுதியில் குண்டும் குழியுமாக, பல்லாங்குழி சாலையாக உள்ளதால், சாதாரண மழைக்கே குட்டைபோல மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால்,பல்வேறு காரணங்களுக்காக தாலுகா அலுவலகத்திற்கு இவ்வழியாக நடந்து செல்வோர் சகதி நீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், வாகனங்களால் நடந்து செல்வோரின் ஆடைகளில் சேற்றுநீர் தெளிக்கிறது. எனவே, தாலுகா அலுவலக வளாகத்தில், தீயணைப்புத் துறை அலுவலகம், சார்நிலை கருவூலம் அமைந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News