சூறைக்காற்றுடன் மழை : மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லறவயல் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம் அடைந்தது.

Update: 2024-05-13 12:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லறவயல் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம் அடைந்தது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் கடுமையாக இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து குளிர்வித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவித்த பொதுமக்கள் தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக ஓரளவு நிம்மதி அடைந்து வருகின்றனர்.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,கடையாலூமூடு,ஆறுகாணி, பத்துகாணி உள்ளிட்ட மழை வர பகுதிகளில் தினமும் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்துகாணி அடுத்த கல்லறவயல் பகுதியில் மரம் முறிந்து விழுந்து மின் கம்பம் முறிந்தது. இதைத் தொடர்ந்து மின்சார வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர் பின்னர் மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News