தர்மபுரி மாவட்டத்தின் மழை நிலவரம்
இன்றைய நிலவரப்படி தர்மபுரியில் 5 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கத்திரி என அழைக்கப்படும் கோடை காலம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி நேற்று மாலை தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.
அதன் படி தர்மபுரி மாவட்டத்தில் ஜூன் 1 இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம் தர்மபுரி 5 மில்லி மீட்டர், மாரண்டஹள்ளி 2 மில்லி மீட்டர், பென்னாகரம் 28 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 3. 6மில்லி மீட்டர் , பாப்பிரெட்டிப்பட்டி 19 மில்லி மீட்டர், என மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 57. 6 மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 6.4 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.