அரியலூர் மாவட்டத்தின் மழையளவு விபரம்
அரியலூர் மாவட்டத்தில் 50.8 மி.மீ மழைபதிவு
Update: 2023-12-16 10:27 GMT
அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் இன்று காலை வரை பெய்த மழையளவு விபரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் வெளியிடபட்டுள்ளது. அதன்படி அரியலூரில் 3.4 மில்லிமீட்டரும், குருவாடியில் 2 மில்லிமீட்டரும், ஜெயங்கொண்டத்தில் 25.8 மில்லிமீட்டரும், சித்தமல்லி டேமில் 4.2 மில்லிமீட்டரும், தா.பழூரில் 10 மில்லிமீட்டரும், செந்துறையில் 1.2 மில்லிமீட்டரும், ஆண்டிமடத்தில் 4.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 50.8 மில்லிமீட்டர் எனவும், சராசரி மழையளவு 6.35 மில்லிமீட்டர் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டிசம்பர் 16 ஆம் தேதியான இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.