காங்கேயத்தில் பரவலாக மழை

காங்கேயத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update: 2024-06-03 05:26 GMT

மழை

கோடைகாலத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக திருப்பூர் மாவட்டம், காங்கேயம்‌ மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று சுமார் 6 மணி அளவில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதை அடுத்து குளிர்ந்த காற்று வீசியது.

Advertisement

 இதனை தொடர்ந்து திடீரென பரவலாக மழைப் பெய்ய ஆரம்பித்தது. சுமார் 30 நிமிடங்கள் வரை பெய்த பரவலான மழை விவசாய நிலங்கள், பரந்த நிலப்பரப்பு, சாலை, கால்வாய், நீர் தேக்கம் ஆகியவற்றில் மழை நீர் தேங்கியது. பின்னர் தொடர்ந்து காற்றில் ஈரப்பதம் நிலவி குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியது.

Tags:    

Similar News