தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மழையின் நிலவரம்

தர்ம்புரி மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 28 .48 மில்லிமீட்டராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-22 02:34 GMT

மழை

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி தருமபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வரும் சூழலில் இன்று காலை 6 மணி நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்,

தர்மபுரி 59 மில்லி மீட்டர், பாலக்கோடு 13. 4, மாரண்டஹள்ளி 17 மில்லி மீட்டர், பென்னாகரம் 52 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 39. 4 மில்லி மீட்டர் , அரூர் 3 மில்லிமீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 41 மில்லி மீட்டர் மொரப்பூர் 9. 5 மில்லிமீட்டர், என மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 193.3 மில்லிமீட்டர் , மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 28 .48 மில்லிமீட்டர்  பதிவாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News