மாவட்டத்தில் பதிவான மழையின் நிலவரம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம்

Update: 2024-05-20 02:26 GMT

தர்மபுரி மாவட்டத்தில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது அதன்படி கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனை அடுத்து, மே 20 இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம் தர்மபுரி 4 மில்லி மீட்டர், மாரண்டஹள்ளி 49 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 45 மில்லி மீட்டர் , அரூர் 16.2  மில்லிமீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 2.5  மில்லிமீட்டர், என மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 117. 7 மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 13. 08 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News