சூறைக்காற்றுடன் கனமழை சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

குமரி மாவட்டம் நெட்டா மலையோரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சாலையில் முறிந்து விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதித்தது.

Update: 2024-05-16 14:04 GMT

குமரி மாவட்டம் நெட்டா மலையோரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சாலையில் முறிந்து விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதித்தது.


தமிழகத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது. இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நீடித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.இந்த நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்உள்ளது.வருகிற 19-ந்தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்க ளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் மற்ற மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் மலையோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது இந்த கன மழை காரணமாக நெட்டா பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் ஊழியர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்
Tags:    

Similar News