நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாம் இடம் யாருக்கு என தெரியவில்லை - எம் எல் ஏ ராஜன் செல்லப்பா பேட்டி

மதுரை அதிமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-11 05:46 GMT

ராஜன் செல்லப்பா

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், ஆலத்தூர், ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம், ஆலங்குளம், பாசிங்காபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டாக்டர் சரவணன் மற்றும் ராஜன் செல்லப்பாவிற்கு மக்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில்

டாக்டர் சரவணன் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றியாக உள்ளது, திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திறந்து மட்டுமே வைக்கிறார்கள், அதிமுக திட்டத்திற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது, எடப்பாடி பழனிச்சாமி கேட்கின்ற கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை, நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கவனத்தை எடப்பாடி பழனிச்சாமி ஈர்த்து உள்ளார், இந்திய அளவில் பேசப்படக்கூடிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்துள்ளார்,

இந்தியா கூட்டணியை முறைப்படுத்த முடியாத ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க தகுதி இல்லாதவர், பாஜக தேர்தல் களத்தில் இல்லாத காரணத்தால் பாஜக குறித்து நாங்கள் விமர்சனம் செய்வதில்லை, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி நிலவுகிறது, மூன்றாவது இடத்தில் பாஜகவிற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி நிலவுவதாக மக்கள் கூறுகிறார்கள், மூன்றாவது இடத்தை பாஜக, நாம் தமிழர் கட்சி பிடிக்கப் போகிறதா? அல்லது நோட்டா பிடிக்க போகிறதா? என்பது தெரியவில்லை,

ஐந்து ஆண்டுகளில் மதுரை மக்களவைத் தொகுதிக்கு செய்த திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுடன் விவாதிக்க தயாரா?" என கூறினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறுகையில் "மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறோம், பத்தாண்டு கால அதிமுக ஆட்சி கால கட்டத்தில் செய்யப்பட்ட சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறோம் அதே வேளையில் 3 ஆண்டு கால திமுக ஆட்சியின் வேதனைகளையும் பட்டியலிட்டு மக்களிடம் வாக்கு சேகரிக்கிறோம் மேலும் ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மக்களுக்கு எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்பதை எடுத்துக் கூறியும் வாக்கு சேகரித்து வருகிறோம், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஐந்தாண்டுகளில் மதுரை மக்களவைத் தொகுதிக்கு செய்துள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென கூறினோம், அதற்கு சு.வெங்கடேசன் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்ல என கூறினார்

Tags:    

Similar News