ரஜினிகாந்த் பிறந்த நாள் : அரசு பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கல்

Update: 2023-12-14 06:20 GMT

பள்ளிகளுக்கு கணினி வழங்கல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் 74வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சத்யா திரையரங்கில் நள்ளிரவு ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.   தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் காலை, மதியம் மற்றும் இரவு உணவுகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள 15 கிராமப்புற மற்றும் மாநகராட்சி அரசு பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற இணைச் செயலாளர் சக்திமுருகன் மற்றும் துணைச் செயலாளர் பெரிய சுவாமிநாதன் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட பொறுப்பாளர் விஜய் ஆனந்த்  முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், செந்தில் ஆறுமுகம், ஹெர்பர்ட்,   ஹார்பர் லட்சுமணன், கண்ணா, ரமேஷ் கார்த்திகேயன் மற்றும் மாநகர ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ராஜு, சுயம்புலிங்கம், வினிஸ்டன், அரசு, ஏகாம்பரம் மற்றும் ஏராளமான ரசிகர்களும் கிளை மன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News