ரஜினி பிறந்த நாள்: வெள்ளி தேர் இழுத்து ரசிகர்கள் வழிபாடு

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் வெள்ளித்தேர் இழுத்து ரசிகர்கள் வழிபாடு செய்தனர்.

Update: 2023-12-12 12:36 GMT

 ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் வெள்ளித்தேர் இழுத்து ரசிகர்கள் வழிபாடு செய்தனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்அதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த வகையில் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் வெள்ளி தேர் இழுக்கப்பட்டது. முன்னதாக ரஜினிகாந்த பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.‌ இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம். கலில், எஸ்.கர்ணன், எஸ்.டி.ராஜ், ஆர்.பாலன், வழக்கறிஞர் எஸ்.சுதர்சன், எம்.நாசர், எஸ்.விமல்ஜித். மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News