ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்தநாள் விழா

பள்ளிபாளையம் லோக்சனா சக்தி கட்சியின் சார்பில் ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-07-05 12:49 GMT

ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்தநாள் விழா

முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவனத் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களின் 78வது பிறந்தநாள் விழா தீண்டாமை ஒழிப்பு நாளாக, பள்ளிபாளையம் லோக் ஜனசக்தி கட்சியின் இளைஞரணி சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்விற்கு இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் ஆதவன் தலைமை தாங்கினார் . ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, கட்சியின் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் . இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் அஸ்கர், இளைஞரணி துணைத் தலைவர் சீனிவாசன், பள்ளிபாளையம் நகர இளைஞரணி செயலாளர் கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், முன்னணி பொறுப்பாளர்கள், திரளாக இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News