ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை

குமரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிடு சிறப்புத் தொழுகை நடந்தது.

Update: 2024-04-10 11:55 GMT
 குமரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிடு சிறப்புத் தொழுகை நடந்தது.

இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான்  தமிழகத்தில் நாளை 11ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் கேரளாவில் இன்று ரம்ஜான் பண்டிகை ஆகும். இதனால் கேரளாவுக்கு இன்று பொது விடுமுறையாகும்.       இந்நிலையில் கேரளத்தை   ஒட்டியுள்ள  குமரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி  குமரி மாவட்டத்திலும் இன்று சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோட்டில் நேற்று பிறை கண்டதன் அடிப்படையில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.       இதனை முன்னிட்டு இஸ்லாமியர்கள் குடும்பத்தினரோடு காலையில் ரமலான் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில்  சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான ஆயிரக்கணக்கான மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதுபோன்று குளச்சல், நாகர்கோவில் இளங்கடை பகுதிகளிலும் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Tags:    

Similar News