ராமநாதபுரம் : 12 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத கிராமம்
திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் 12ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் உள்ளது.
திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்கள் ஊருக்கு சென்று வர கடந்த 12வருடத்துக்கு முன்பு போடப்பட்ட சாலை உள்ளது. ஏற்கனவே போடப்பட்ட தார் சாலை, சீரமைக்கப்படாமல் மண்சாலையாக மாறிவிட்டது. சில இடங்களில் நடந்து கூட செல்ல முடியாத அளவில் உள்ளது பள்ளி, கல்லூரிக்கு செல்லவும், அவசர காலத்தில் ஆட்டோக்கள் அழைத்தால் ஆட்டோக்கள்,ஆம்புலன்ஸ் வர மறுக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
பலமுறை இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் செவி சாய்க்கவில்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் கிராமத்து பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி இந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் செய்ய போவதாக அறிவித்தனர். அதனால் பகுதியில் பரப்பரப்பு நிலவியது.
அங்கு வந்த சிலர் அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலையில் நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர். பின் மக்கள் கூறுகையில் விரைவில் சாலை அமைக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களில் கையில் எடுக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.