ராமநாதபுரம் புத்தக கண்காட்சி துவக்கம்

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து நடத்தும் முகவை சங்கமம் புத்தக கண்காட்சி துவங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-05 01:54 GMT

ராமநாதபுரம் நிருவாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து நடத்தும் முகவை சங்கமம் என்ற பெயரில் 6வது புத்தக திருவிழா  ராமநாதபுரம் ராஜாமேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இவ்விழாவில் மாவட்ட இவ்விழாவை ஆட்சியர் விஸ்னுசந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் புத்தகதிருவிழாவில் இடம்பெற்ற ஸ்டால்களை திறந்துந்து வைத்து பார்வையிட்டார்.

இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தகங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கைவினைப்பொருட்கள் தோட்டக்களை துறையின் மலர்கண்காட்சி இடம்பெற்றது. மாபெரும் இந்த புத்தக திருவிழாவை சிறைத்துறை அதிகாரிகளின் சார்பாக கைதிகளுக்கு புத்தகம் வழங்க பெட்டி வைக்கப்பட்டது. இத்திருவிழாவில் லோகு சுப்பிரமணியன் சார்பில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற நிகழ்ச்சிகள் நடந்து.

இவ்விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அப்துல்கலாம், நெப்போலியன் போன்றவர்களை நினைவுபடுத்தி பேசினார். இப்புதகவிழா விழாவில் பேரறிஞர் அண்ணா அறுவைசிகிச்சைக்கு செல்லும் முன்பு புத்தகத்தை படித்துவிட்டு வருகின்றேன் என்றார். அதே போல டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும் மிகப்பெரிய எழுத்தாளர் அவரும் பல்வேறு புத்தகங்களில் மூலமாக நாட்டு மக்களுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கியவர் என்று கூறினார். இதில் குறைந்த விலையில் விலைப்பட்டியலுடன் கூடிய அறுசுவை இயற்கை உணவகம் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 10 நாட்களுக்கு இந்த உணவுகள் வழங்கப்படுகிறது. ஏராளமான அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர். கே கார்மேகம் துணைத் தலைவர் பிரவீன் தங்கம் ஸ்டாலின் கமலக்கண்ணன் மற்றும் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News