ராமநாதபுரம் கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம்
பயோனியர் மருத்துவமனையில்நர்சிங் காலேஜ் மாணவிகளுக்கு மூன்று நாள் முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.
Update: 2024-03-15 10:47 GMT
ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளையின் சார்பாக பயோனியர் மருத்துவமனையில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் இரண்டு பிரிவுகளாக நடக்க உள்ளதுவெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இதில் மாநில முதலுதவி பயிற்சியாளர் திரு அலெக்ஸ் அவர்கள் பயிற்சி முகாம் நடத்தினார். இதில் கல்லூரியின் முதல்வர் கல்லூரி பயிற்றுநர்கள் பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கள்ளன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ரமேஷ் அவர்கள் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார்கள்.