ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருடன் செய்தியாளர் சுற்றுப்பயணம்

Update: 2024-02-25 09:27 GMT
ராமநாதபுரம் இந்த செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு பணி நடைபெறும் பொழுது பொறியாளர்கள் ஆய்வு செய்ததுடன் தரம் மற்றும் அதன் தன்மை மாறாமல் அமைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் பேரூராட்சி பகுதியில் நவீன மின்னணு மயானம் ரூ.161 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், பணியினை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கோட்டைமேடு ஊராட்சியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கவுள்ள உணவுப் பொருள்களின் தரம் குறித்து ருசித்துப் பார்த்ததுடன் பொருள்களின் இருப்பு குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் சுகாதாரமான முறையில் பராமரித்திட வேண்டுமொன பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் முதுகுளத்தூர் வட்டம், சாம்பக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு, பதிவேடுகளில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்துள்ள பட்டியலினிபடி விவசாயிகளிடம் அரசு நெய் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், இதேபோல் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்து பயன்பெற்றிட அலுவவர்கள் அறிவுறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இந்த செய்தியாளர் பயணத்தின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி , உதவி செயற்பொறியாளர் ஜெய கிருஷ்ணன் , இளம் பொறியாளர் இக்பால், கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News