ராமநாதபுரம் துரை வைகோ குற்றச்சாட்டு
ராமநாதபுரம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணம் ஒன்றிய பாஜக அரசுதான் - துரைவைகோ குற்றச்சாட்டு.
Update: 2024-02-23 05:33 GMT
ராமநாதபுரத்தில் நடைபெறும் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ சென்றார். அப்போது பரமக்குடியில் மதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். மதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் பாக்கியம் என்பவரின் புதிய காருக்கு கழகக் கொடியினை பொருத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் துரைவைகோ பேசுகையில் இன்கம்டேக்ஸ், அமலாக்கத்துறை, சிபிஐ இது போன்ற ஒன்றிய ஸ்தாபனங்களை வைத்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி வருகின்றனர். பாஜகவிற்கு எதிராக ஆளுகின்ற மாநிலங்களில் கட்சிகளுக்கு இடையூறு செய்வதற்காக இந்த ஸ்தாபனங்களை பயன்படுத்துகின்றனர். தேர்தல் பத்திரங்கள் செல்லுபடி ஆகாது என உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு வழங்கி உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 12,500 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளனர். இதில் 6500 கோடி ரூபாய் பாஜகவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், எந்தெந்த கட்சிகளுக்கு, எவ்வளவு நிதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மார்ச் 13ஆம் தேதி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பாஜகவின் அம்பலம் வெளியாக உள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இன்கம்டேக்ஸ், அமலாக்கத்துறை, சி பி ஐ உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் போன்று பாஜக பயன்படுத்தி வருகிறது. ஊழல் சாற்றப்பட்ட பாஜக தலைவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத் துறை சோதனை செய்யவில்லை, நடவடிக்கை எடுக்கப்படவில்லை, அது மக்களுக்கு தெரியும். பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் என பாஜகவினர் கூறுகின்றனர் என்ற கேள்விக்கு... எந்த ஒரு ஒன்றிய அரசின் திட்டத்திற்கு உண்டான பணத்தை தருவதில்லை. உதாரணத்திற்கு கிராமங்களில் மோடி வீடு திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்ட இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் பாதி பணம் வழங்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு பணம் வழங்குவதில்லை, இதற்கு மாநில அரசே பல இடங்களில் பணம் செலவு செய்கிறது மெட்ரோ ரயில் இரண்டாம் பாகத்திற்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதுவரை ஒன்றிய அரசு பங்களிப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் கொடுக்க வேண்டும் இரண்டு ஆண்டுகளாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு கேபிநெட் கம்யூனிட்டி ஆண் எக்கனாமிக் ஆஃபர்ஸ் அனுமதி கொடுக்காததால் ஒன்றிய அரசின் நிதி கூட கிடைக்கவில்லை. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் பாகத்திற்கான அனைத்து வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் நிதி பற்றாக்குறையாக உள்ளது. ஜிஎஸ்டி வந்ததால் தமிழகத்திற்கு 20 ஆயிரம் கோடி நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் 37 ஆயிரம் கோடி மதிப்பிலான தனியார், அரசு சொத்துக்கள் அழிந்துள்ளது. இதற்கு உண்டான நிவாரணம் ஒன்றிய அரசு அளிக்கப்படவில்லை. நிதி பற்றாக்குறை உள்ள தமிழகத்தில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு நிதி கொடுக்காததால் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசு நிதி அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலை நிலவும் போது என மோடி திட்டம் ஏன் வைக்க வேண்டும் ?? அதற்கு டாக்டர் கலைஞர் திட்டம் என வைத்து விடலாம். தமிழகத்தில் அரிசி விலை உயர்வு குறித்த கேள்விக்கு அரிசி விலை ஏற்றம் மற்றும் எல்லாவற்றின் விலை ஏற்றத்திற்கு மூல காரணம் எரிபொருளின் விலை ஏற்றம் தான் காரணம். பெட்ரோல், டீசல் விலை என்று ஏறியதோ அன்றிலிருந்து அனைத்து பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. தொழிற்சாலையில் ஒரு பொருள் தயாரித்தால் அதற்கு எரிபொருள் தேவைப்படுகிறது. தயாரித்த பொருளை சந்தைக்கு கொண்டு வர எரிபொருள் தேவைப்படுகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என மோடி கூறினார். அவர்கள் ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் விலை 22 ரூபாய், டீசல் விலை 55 ரூபாய், சமையல் எரிபொருள் விலை 450 ரூபாயாக இருந்தது. இன்று அனைத்தின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் உயர்ந்துள்ளது எனக் கூறியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட இன்று விலை குறைந்துவிட்டது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ஒரு பீப்பாவிற்கு 60 டாலர் வீதம் வாங்குகின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இந்த லாபத்தை ஒன்றிய அரசு தான் கொள்ளை அடிக்கிறது. அரிசி, பால் ஆகியவற்றின் விலை ஏற்றதற்கு அடிப்படை காரணம் எரிபொருள் விலை ஏற்றம் தான். அதற்குக் காரணம் ஒன்றிய பாஜக அரசு. தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணம் ஒன்றிய பாஜக அரசுதான். நடிகை திரிஷா குறித்த கேள்விக்கு அப்போது அருகில் இருந்தவர் இது போன்ற கேள்விகளை தவிர்க்குமாறு கூறிய நிலையில் அதற்கு துரைவைகோ கூகுலி போட்டாலும், பவுன்சர் போட்டாலும் அதனை நாம் எதிர் கொள்ள வேண்டும். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை உள்ள நிலையில் அதற்கு கவனம் செலுத்த வேண்டும். இது போன்ற கேள்விகளை நீங்களும் நானும் புறக்கணிக்க வேண்டும் என கூறினார்.