ராமநாதபுரம் விவசாயிகள் வேதனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது இதனால் ஒவ்வொரு விவசாயிகளும் ஏக்கருக்கு ரூபாய் 20000 வரை பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழக அரசு உடனடியாக கணக்கீடு செய்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் இது பற்றி தமிழக வைகைப் பாசன விவசாய சங்க மாநிலத் தலைவர் எம் எஸ் கே பாக்கியநாதன் கூறியதாவது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் 18566ஹெக்டேர் பரப்பளவில் சம்பா பருவ சாகுபடி செய்யப்பட்டது
தற்போது பெய்த அதீத கணமழை மற்றும் வெள்ளநீரினால் நன்றாக விளைந்த நெல் மகசூல் அறுவடை செய்ய காத்திருந்த சூழலில் செல்வநாயகபுரம் ஆனைசேரி திருவரங்கம் செல்லூர் நல்லூர் கீரனூர் தட்டனேந்தல் வைத்தியனேந்தல் கடமங்குளம் புல்வாய்க்குளம் எட்டிசேரி முதலிய கிராம பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் நெல்மணிகள் மீண்டும் முளைத்து விட்டன ஒருசில பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்ட து எந்திர சாதனங்கள் வாயிலாக கூட அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை.
இதே போல நைனார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சா மடை காச்சான், நயினார் கோவில் , அக்கிர மேசி ஆகிய பகுதிகளிலும் மண்டபம் ஒன்றியம் வழுதூர் உடைசியார் வலசை ஆகிய பகுதிகளிலும் பயிர்கள் பாதிப்படைந்துள்ளது எனவே அதீதமான கனமழை மற்றும் வெள்ளம் மற்றும் இடர்பாடுகளால் சேதமடைந்த பயிர்களுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரிடையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தேசிய வேளாண் காப்பீட்டு தொகை மற்றும் வெள்ள நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.