ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

ராமநாதபுரம் ராமேஸ்வரம் மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையின் போது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடாதாக கூறினர்.

Update: 2024-02-20 15:00 GMT

போலீஸ் பாதுகாப்பு

ராமநாதபுரம் ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மேலும் ஒரு மீனவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற உத்தரவு.இலங்கை அரசை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டி தன் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தம்; நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு* மேலும் மீனவர்களின் கோரிக்கை வலியுறுத்தி ஒன்றிய அரசு,

இலங்கை அரசை கண்டித்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 55 கிலோமீட்டர் பேரணியாக சென்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் சென்று அரசு சார்ந்த அனைத்து அடையாள அட்டைகளை ஒப்படைக்க பேரணியாக சென்றனர் . ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம் நகர் பகுதியில் வழியாக தங்கச்சிமடம் வந்தடைந்தனர் அப்பொழுது மாவட்ட காவல்துறை அதிகாரி மீனவர்களை தடுத்த நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் அதற்கு தாங்கள் அமைதியான முறையில் தான் போராட்டம் நடத்தி வருகிறோம்.

நாங்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தீருவோம் என்று கூறி அங்கிருந்து போராட்டத்தை மீண்டும் தொடங்கினர் தொடர்ந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாம்பன் எல்லை வரை நடந்து வந்தனர்.

அப்பொழுதுமாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்களும் மாவட்ட காவல்துறை அதிகாரி நேரில் வந்து பாம்பன் பகுதியில் மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் மீனவர்கள் கூறியதாவது வரும் 22ஆம் தேதி இலங்கை நீதிமன்றத்தில் விசாரணை வருவதை தொடர்ந்து அன்று அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் வரும் 23ஆம் தேதி கச்சத்தீவில் நடக்கும்.

திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர் மத்தியில் இருந்து கூறப்பட்டது இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளர் மீனவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து மீனவர்கள் தற்காலிகமாக இந்த போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக 22 ஆம் இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்கள் விடுதலை என்று வரவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கூறினார்.

Tags:    

Similar News