ராமநாதபுரம் மருத்துவ முகாம் - பொதுமக்கள் பங்கேற்பு

மாயாகுளத்தில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

Update: 2024-03-08 09:37 GMT

ராமநாதபுரம்மாவட்டம் கீழக்கரை மாயாகுளத்தில் நேருஜி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக கமிட்டி , இந்து ஷத்திரிய நட்டாத்தி நாடார் உறவின் முறை அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் கீழக்கரை வட்டாட்சியர் எஸ். பழனிக்குமார் தலைமையில் நிர்வாக தலைவர் ஹாலிக் , அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் , பள்ளி தாளாளர் ஹைதர் அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இம்முகாமில் இரத்தப் பரிசோதனை , சிறுநீர் பரிசோதனை கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டறிந்து ஆலோசனை , தேவைப்படுவோர்களுக்கு இ.சி.ஜி. எடுத்து ஆலோசனை இரத்த அழுத்தம் கண்டறிந்து ஆலோசனை உட்பட உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர்கள் வழங்கினார்கள்.

இம்முகாமில் இராமநாதபுரம் இந்தியன் ரெட்கிராஸ் சேர்மன் மரு.எஸ். சுந்தரம் திருப்புல்லாணி வட்டார மருத்துவர் ரசிக்தீன் ஏர்வாடி காவல் நிலைய ஆய்வாளர் களாராணி, சார்பாய்வாளர் சதீஷ் குமார், மாயகுளம் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ், மாணிக்கனேரி கிராம நிர்வாக அலுவலர் அங்கேயர் கண்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜிசியா பானு, ஜமாத்தார்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News