ராமநாதபுரம் நவாஸ் கனி ஜமாத் நிர்வாகிகளை சந்திப்பு

தொண்டியில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தமுமுகவினரை திமுக கூட்டணி முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி சந்தித்து வாக்குகள் கேட்டார்.

Update: 2024-03-21 13:21 GMT

நவாஸ் கனி சந்திப்பு

திமுக கூட்டணி ராமநாதபுரம் பராளுமன்ற வேட்பாளராக முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி போட்டியிடுகிறார் .கடந்த தேர்தலில் போட்டியிட்டு தற்போது எம்.பி.யாகவும் உள்ளார். இவர் நேற்று தொண்டியில் ஜமாத் நிர்வாகிகளையும் தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கோரினார். தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், மமக மாவட்ட செயலாளர் ஜிப்ரி , திருவாடானை சேர்மன் முகமது முக்தார், தொண்டி திமுக நகர் செயலாளர் இஸ்மத் நானா, நவ்பல், மமக செயலாளர் பரக்கத் அலி உட்பட நிர்வாகிகள் அனைத்து ஐமாத்தினர் கலந்து கொண்டனர். நவாஸ் கனி பேசுகையில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொண்டிக்கு இரண்டு ஹைமாஸ் விளக்குகள், அரசுப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் என பல திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்றார்.
Tags:    

Similar News