ராமநாதபுரம்: புதிய போலீஸ் எஸ்.பி., பதவியேற்பு

கடலோரப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்; கடத்தல், போதை தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் எஸ்.பி., சந்தீஸ் கூறினார்.

Update: 2024-01-12 15:11 GMT

கடலோரப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்; கடத்தல், போதை தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் எஸ்.பி., சந்தீஸ் கூறினார். 

ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் இலங்கை கடத்தல் பொருட்கள் சம்பவம் கஞ்சா போதை தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் ராமநாதபுரம்- எஸ் பி யாக பணி செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்- பெண்கள் பாதுகாப்பு, கஞ்சா விற்பனை தடுக்க அதிரடி நடவடிக்கை, கடத்தல் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற சம்பவங்களில் விழிப்புடன் செயல்பட்டு கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம், பொதுமக்கள் தங்களின் குறைகளை நேரடியாகவோ செல்போன் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தமட்டில் தேவர் குருபூஜை இமானுவேல் சேகரன் ஆகிய பெரிய விழாக்கள் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் ஆகும் தூத்துக்குடி கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன் இந்த மாவட்டத்தை பற்றி முழுமையாக அறிந்த பின்பு தீவிரமான நடவடிக்கையில் எடுக்கப்படும் என புதிய எஸ் பி யாக பதவியேற்ற சந்தீஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் எஸ் பி அலுவலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் போலீசார் வரவேற்றனர்

Tags:    

Similar News