ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
ராமநாதபுரம் 12000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரம் காவாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் காவலர் அம்மாசி இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். காவாகுளம் கிராமத்தில் இவரது மனைவி பெயரில் உள்ள வீடுக்கு மின் இணைப்பு வேண்டி சிக்கல் மின் வாரியத்தில் பணிபுரிந்து வரும் உதவி மின் பொறியாளர் மலைச்சாமியை தொடர்பு கொண்டுள்ளார்.
அதற்கு அவர் ரூ.12000 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும் என்றும் அதில் ஆன்லைனில் பதிவு செய்த தொகை ரூ.5192 போக மீதம் உள்ள பணம் தனக்கு லஞ்சமாக வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காவலர் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் குமரேசனிடம் புகார் செய்துள்ளார்.
உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் குமரேசன் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.7000 கொடுக்கப்பட்ட நிலையில் அந்த பணத்தை வாங்கிய மின்வாரிய துணை பொறியாளர் மலைச்சாமி கையும் களவுமாக கைது செய்யப்பட்டு அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.