ராமநாதபுரம் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
கடலாடி மீனங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில் மே 67.71 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
Update: 2024-03-14 01:36 GMT
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனங்குடி கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 105 பயனாளிகளுக்கு ரூ.26.71 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் ஒவ்வொரு மாதமும் நடை பெறும் மக்கள் தொடர்பு முகாமில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் சென்று அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அரங்கங்கள் அமைத்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பார்கள். அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் கிராம பகுதிகளில் நடைபெறும் இதுபோன்ற முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்படும் அரங்குகள் மூலம் தேவைகளையும், திட்டங்களையும் எளிதில் பெறுவதற்குரிய உதவிகளையும் நேரில் சென்று கேட்டு பயன் பெற்று கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தனலெட்சுமி , கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜன் கடலாடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனியசாமி பாண்டியன் ஜெயசந்திரன் மீனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமலெட்சுமி நீலமேகம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கீர்த்திகா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.