ராமநாதபுரம் அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை

ராமநாதபுரம் அருகே வழுதூர் பகுதியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2024-06-15 10:55 GMT

கொள்ளை நடந்த வீடு

ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர், அருளொளி நகரில் வசிப்பவர் அங்குச்சாமி மகன் அருண், இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது மனைவி ஹேமா வீட்டை பூட்டி விட்டு அப்பகுதியில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு உடைச்சியார் வலசை பகுதிக்கு சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டியிருந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே அறையில் இருந்த பீரோவை உடைத்தும் அதிலிருந்த லாக்கரில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். நேற்று காலையில் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஹேமா ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் அளித்தார்.

உடனடியாக விரைந்து சென்ற போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். இதேபோல வழுதூர் பகுதியில் வசித்து வந்த அருண் பெரியப்பா செல்லம் என்பவரின் வீட்டையும் உடைத்து அங்கிருந்த பீரோவை உடைத்தும் சில பொருட்களை திருடி சென்றனர்.

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு திருட்டு சம்பவத்தால் வலுதூர் பகுதியில் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறையை துணை கண்காணிப்பாளர் மற்றும் கேணிக்கரை காவல்துறை ஆய்வாளர் ஆறுமுகம், சார்பு ஆய்வாளர் தினேஷ் ஆகியோர்கள் இரண்டு இடங்களிலும் விசாரணை நடத்தினர்.

விரைவில் குற்றவாளிகள் பிடி விடுவார்கள் என தெரிவித்தனர் மேலும் வழுதூர் உடைச்சியார் வலசை ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைச்சியார் வலசை பகுதியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டமின் மோட்டார்களை திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே காவல்துறை வழுதூர் விளக்கு ரோடு அல்லது உடைச்சியார் வலசை ஆகிய பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

Tags:    

Similar News