ராமநாதபுரம் : கடத்தல் தங்கம் பறிமுதல்

ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு கடத்த முயன்ற எட்டு கிலோ தங்கத்தை சுங்கக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-11-29 13:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு தங்க கட்டிகளை கடத்துவதாக பெற்ற தகவலை அடுத்து, தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் அதிவேகமாக சந்தேகத்துக்கிடமாக வந்த நாட்டுப்படகை மடக்கி விசாரணையில் ஈடுபட முற்சித்தனர். அப்போது நாட்டுப்படகில் இருந்தவர்கள் படகை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றதை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் துப்பாக்கியால் கடத்தல்காரர்களை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடத்தல்காரர்கள் பயந்து படகை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கடத்தல்காரர்கள் விட்டு விட்டு சென்ற படகில் இருந்து 3 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் கடத்தல்காரர்கள் விட்டு விட்டு சென்ற பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில், மேலும் 5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கக் கட்டிகள் கிடைத்துள்ளது. இதையடுத்து ஒரே நாளில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.92 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ராமேஸ்வரம் தீவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ச்சியாக கடத்தல் தங்கங்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் விதமாக கடலோர பகுதியில் தீவிர ரோந்து பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News