ராமநாதபுரம்: தமிழகம் வந்த இலங்கை குடும்பம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகம் வந்துள்ளனர்.;
By : King Editorial 24x7
Update: 2023-11-27 02:53 GMT
அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை குடும்பம்
இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத் தமிழர்கள் வாழ வழி இன்றி நாளுக்கு நாள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மர்ம படகு மூலம் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, தமிழக கடற்படை போலீசார் விரைந்து சென்று இலங்கையைச் சேர்ந்த ஏழு பேரையும் மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.