ராமநாதபுரம் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
கமுதி அருகே கீழராமநதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழராமநதி கிராமத்தில் சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி முழுவதும் உப்பு நீராக இருப்பதால், குடிநீருக்காக டிராக்டர் தண்ணீரை குடம் பத்து ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலையில்இப்பகுதியினர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு ரூ. 5 ரூபாய் மட்டும் செலுத்தினால் 20 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் தானியங்கி குடிநீர் இயந்திரம் வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் . அதன்படி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று,ரூ.15 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ இவ் விழாவிற்கு தலைமை தாங்கி திறந்து வைத்தார்.வருகை தந்த அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி வரவேற்று பேசினர். இந்நிகழ்ச்சி யில் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,காவல்துறை ஆய்வாளர் குருநாதன் ,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார்,ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கோட்டை ராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மைதீன், திமுக கிளைச் செயலாளர் நாகூர் பிச்சை, கீழராமநதி ஊராட்சி செயலர் முத்துராமு, கே.நெடுங்குளம் ஊராட்சி செயலர் முகமது ஹக்கீம்உட்பட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தால் கிராமத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெறுவார்கள.