ராமநாதபுரம் இறந்த கணவரின் உடலை கொண்டுவர மனைவி மனு
சவுதியில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊர் எடுத்து வர நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-21 10:40 GMT
மனு அளிக்க வந்த பெண்
ராமநாதபுரம் வடக்கு மல்லல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர் சவூதி அரேபியாவில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சவுதியில் உள்ள ஐயப்பனுக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்த அவரது மனைவி ஜெயராணி உயிரிழந்த தனது கணவனின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீருடன் மனு அளித்தார்.