ராமநாதபுரம் : உலக அயோடின் பற்றாக்குறை தின விழா..!
ராமநாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உலக அயோடின் பற்றாக்குறை தினவிழா நடைபெற்றது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-21 12:54 GMT
உலக அயோடின் பற்றாக்குறை தின விழா
ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உலக அயோடின் பற்றாக்குறை தின விழா கொண்டாடப்பட்டது. தேவிபட்டினம் சாலையில் அமைந்துள்ள உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று உலக அயோடின் பற்றாக்குறை தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் Dr. G.விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் எம் ஜெயராஜ் முன்னிலையில் மாணவ மாணவிகளுக்கு அயோடின் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சித்தார் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் Dr.மகேஸ்வரி சுகாதார ஆய்வாளர் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரி கீழக்கரை நுகர்வோர் சங்கச் செயலாளர் சையது இப்ராஹிம் ராமநாதபுரம் நுகர்வோர் சங்க செயலாளர் p.லதா கல்லூரியின் முதல்வர் p.பாலகிருஷ்ணன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.