இராமாநுசரின் 1006 ஆவது பிறந்த நாள் விழா - வைணவச் செம்மல் விருது
இராமாநுசரின் 1006 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த கலைமாமணி முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் நினைவு வைணவச் செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
Update: 2023-10-30 01:56 GMT
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வீனஸ் வித்யாலயா பள்ளியில் பூங்குயில் பதிப்பகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ஸ்ரீ இராமாநுசரின் 1006 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த கலைமாமணி முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் நினைவு வைணவச் செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். டாக்டர் மாதவன், திருமலை திருப்பதி தேவஸ்தான திருப்பாவை சொற்பொழிவாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொளி மணியன் பங்கேற்று இராமாநுசரின் பார்வையில் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் நெய்வேலி தாய் தொண்டு மைய நிறுவனர் | ராசி ஜெகதீஸ்வரன் இராமாநுசரின் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தலைமை ஆசிரியர் வாசு, மலர் சாதிக், அன்னை சீனுவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கவிஞர்கள் தனசேகரன், சதானந்தன், வந்தை குமரன், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்டோர் இராமாநுசர் குறித்த கவிதை வாசித்தனர். சென்னை இந்துக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் குணாநிதி வைணவச் செம்மல் விருதை பெற்றுக் கொண்டு ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் ரோட்டரி கிளப் வீரராகவன், டாக்டர் காளிச்செல்வம், தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், சட்டப் பணிக்குழு ஆலோசகர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.