100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி போட்டி
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது.
Update: 2024-04-07 07:03 GMT
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாபநாசம் சட்டமன்ற தொகுதி பூண்டி புஷ்பம் கல்லூரியில் பாபநாசம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலருமான முத்துகிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவருடைய ரங்கோலி கோல போட்டி நடைபெற்றது. இதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு 100% வாக்களிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் சரக வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.