ராணிப்பேட்டை மாதாந்திர சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றது..

Update: 2024-02-20 16:08 GMT

சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு குறித்தும், மாவட்ட முழுவதிலும் உள்ள சாலை பாதுகாப்பு குறித்தும், மாவட்ட முழுவதும் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி உட்பட அனைத்து மாவட்ட அலுவலர்கள் காவல்துறை வட்டாட்சியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News