ராசிபுரம் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் இடிப்பு..
50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து ஒராண்டில் ஈரடுக்கு வாகனம் நிறுத்துமிடத்துடன் கூடிய வணிக வளாகப் பணிகள் முடிவடையும் என தெரிகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-03-30 11:49 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரூ.5.75 கோடி மதிப்பில் ஈரடுக்கு கொண்ட வணிக வளாகம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் கட்டும் பணிக்காக கடந்த 50 ஆண்டுகால பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக வணிக வளாகம், பயன்படுத்த முடியாத வகையில் நகராட்சி தங்குமிடம் போன்ற இருந்து வந்தன. இக்கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், நகராட்சி சார்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும் ராசிபுரம் நகரில் குருகிய சாலைகல் கொண்டதாக இருப்பதால், இருசக்கர, நான்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ரூ.5.75 கோடி மதிப்பில் இதற்கான பூமிபூஜை அண்மையில் நடைபெற்றது. தற்போது 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து ஒராண்டில் ஈரடுக்கு வாகனம் நிறுத்துமிடத்துடன் கூடிய வணிக வளாகப் பணிகள் முடிவடையும் என தெரிகிறது.