ராசிபுரம் : பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் நகர பகுதிகளில் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-05 03:13 GMT

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான டாக்டர் கே.பி. ராமலிங்கம் போட்டியிடுகின்றார். இவர் கடந்த சில தினங்களாகவே பல்வேறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

அதன்படி ராசிபுரம் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ராசிபுரம் பழைய பஸ் நிலையம், கிழக்கு தெரு, பட்டணம் சாலை, வி நகர், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டாக்டர் கே.பி. ராமலிங்கம் அவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் .

இந்த வாக்கு சேகரிப்பில் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு செயலாளர் சதீஷ் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் சுகன்யா நந்தகுமார், நகர தலைவர் வேலு, மற்றும் கூட்டணி கட்சினர் பாமக நிர்வாகிகள் பொன்னுசாமி, மோகன்ராஜ், அமமுக நிர்வாகிகள் உதயகுமார், சங்கமேஸ்வரன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News