ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.

Update: 2024-05-23 12:50 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீமிதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்தக் கோயிலின் ஆண்டு திருவிழா மே 13-ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மே 16-ல் கம்பம் நடுதல் ,மே 20-ல் பூவோடு பற்றவைத்தல் உள்ளிட்ட நிகழச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை அம்மை அழைத்தல், சிறப்பு அபிஷேகங்கள், இன்னிசை பட்டி மன்றம் நடைபெற்றன. பின்னர் புதன் கிழமை சக்தி அழைத்தல், பொங்கள் வைத்தல், அக்னி குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் மேள தாளங்களுடன் சாமியாடி ஊர்வலமாக ஏரளமான பக்கர்கள் கலந்து கொண்டு கையில் தீ சட்டி ஏந்தியும், குழந்தைகளை தூக்கிச் சென்றும் தீமிதி விழாவில் பங்கேற்று தங்களது நேர்த்திகடனை செலுத்துனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு,அபிஷேகம் செய்து தீபாரதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் பூசாரி பக்தர்களுக்கு சாட்டையால் அடிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. சாட்டை அடி வாங்கினால் பில்லி சூனியம் நீங்கும், கஷ்டம் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வி , செல்வம் கிட்டும் என்று நம்புவதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் பூசாரியிடம் சாட்டை அடி பெற்றனர்.
Tags:    

Similar News