ராசிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா
ராசிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-19 13:45 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஒவ்வொரு பிரதோஷம் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் கைலாசநாதர் உடனுறை தர்ம சம்வர்த்தினி மற்றும் ஸ்ரீ நந்தி பகவானுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆனி மாத முதல் பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நந்தி பகவானுக்கு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கைலாசநாதர் தர்ம சம்வர்த்தினி அம்பாள் உற்சவர் திருத்தேரில் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நமச்சிவாய என கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.