தொண்டு நிறுவத்துடன் இணைந்து மகளிர் தினம் கொண்டாடிய வங்கி

ராசிபுரத்தில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-03-09 11:01 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மேக்னம் தொண்டு நிறுவனம், நபார்டு மற்றும் மைக்ரோசாப்ட் இந்தியன் வங்கி  இணைந்து மகளிர் தின விழாவை கொண்டாடின.

விழாவில் மைக்ரோ சாட் இந்தியன் வங்கி கிளை மேலாளர் திருமுருகன் வர வேற்புரையாற்றினார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ்.ர மேஷ் தலைமையேற்று நாபர்டின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் குறித்து பேசினார். மாவட்டதொழில் மைய பொதுமேலாளர் வி.சகுந்தலா மாவட்ட தொழில் மையத்தில் உள்ள மானிய திட்டங்களான என்இஇடிஎஸ், பிஎம் இஜிபி, யுஒய்இஜிபி பிற திட்டங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

ராசிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் அசோகன், வங்கியில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினார். மேக்னம் திட்ட இயக் குனர் ச.சத்தியதாஸ் சர்வதேச மகளிர் தினம் 1988-ல் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தி வெற்றியும் கண்ட நாள் மகளிர் தின மாக கொண்டாடப்படு கிறது என்று மகளிர் தின விழா பற்றி விளக்கினார்.

இவ்விழாவில் நாபார்டு - மேக்னம் மூலம் எல்இடிபி பயிற்சி பெற்ற 10 பயனாளிகளுக்கு 1,7 5,000 மதிப்பு மானியத்துடன் கூடிய 5,00,000 கடனுதவி பிஎம்இஜிபி திட்டத்தில் வழங்கப்பட்டது. 12 பயனாளிகளுக்கு பிறதிட்டத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் வி.சித்ரா நன்றியுரை ஆற்றினார்.

Tags:    

Similar News