ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
கடையநல்லூரில் இருந்து சொக்கம்பட்டியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு ரேஷன் அரிசியை கடத்தி கடத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.;
Update: 2024-02-22 02:51 GMT
கடையநல்லூரில் இருந்து சொக்கம்பட்டியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு ரேஷன் அரிசியை கடத்தி கடத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி சொக்கம்பட்டியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வேனிலிருந்த 20 மூடை அதாவது 1000கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீசார் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தார். குற்றப்புலனாய்வு போலீசார் omni வேனையும் அதிலுள்ள அரிசியையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசியை கடத்தி சென்ற தனியார் அரிசி ஆலையில் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.