ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பேனில் ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 கிலோ அரிசி மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-23 11:37 GMT

ரேஷன் அரிசி கடத்தல்

தாராபுரம் அலங்கியம் சாலையில் சீதக்காடு பகுதியில் நேற்று வேன் ஒன்று வந்தது.அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வநாயகம், காவல்துறையினர் லட்சுமி மற்றும் மணிகண்டன் ஆகியோர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது வேனில் 600 கிலோ அரசி இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவர்களை வேனுடன் தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு மற்றும் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் திருப்பூர் உணவுப் பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆனைமலையைச் சேர்ந்த ரேசன் அரிசி கடத்தல் வியாபாரிகள் சிவகுமார் வயது 29 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் 26 மற்றும் வேனை ஒட்டி வந்த மூலனூர் மருதநாயக்கன்பட்டி ராஜ்குமார் 57 என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் தாராபுரம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இடையே கோரிக்கை எழந்துள்ளது.
Tags:    

Similar News