காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-28 15:21 GMT

கைது செய்யப்பட்டவர்

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் (எ) சுந்தரராமன். தமிழக அரசு விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொது விநியோக திட்ட ரேசன் அரிசியை , சில ஆண்டுகளாக குறைந்த விலைக்கு வாங்கி , தொடர்ந்து அண்டை மாநிலங்களுக்கு கடத்தி சென்று அதிக லாபத்தில் ரேசன் அரிசி விற்பனை செய்துள்ளார்.

இதுசம்மந்தமாக இவர் மீது கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவரை தொடர்ந்து கண்காணிப்பதற்காக காஞ்சிபுரம் சிவில் சப்ளைஸ் காவல் துறையினர் இவர் மீது சரித்திர பதிவேடு துவங்கி அவரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 06.12.2023 ஆம் தேதி காஞ்சிபுரம் அடுத்த ஆரியபெரும்பாக்கம் பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கி வந்து மறைவிடத்தில் அடுக்கி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ரகசிய தகவலின்படி போலீஸ் அவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடத்தில் இருந்து குறைந்த விலைக்கு இலவச ரேசன் அரிசியை வாங்கி அதை கடத்துவதற்காக அடுக்கி வைத்திருந்த சுமார் 2150 கிலோவை கைப்பற்றி காவல் நிலையம் வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த ஆண்டே அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தி கள்ள சந்தையில் வியாபாரம் செய்வதால் இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்த இவர் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கள்ள சந்தை (குண்டர் சட்டம்) தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News