ரேஷன் கடை பெண் ஊழியர் வெட்டிக் கொலை
ரேஷன் கடை பெண் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 16:54 GMT
பெண் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளம்-மதுரை சாலையில் உள்ள குமரன் நகர் பகுதில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார். இவர் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகாபதி. ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. , இந்நிலையில் இன்று காலை தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் லட்சுமணன் அம்பிகாபதியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலே அம்பிகாபதி இறந்தார். அக்கம் பக்கத்தினர் விளாத்திகுளம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அம்பிகாவதி உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து தப்பியடோடிய லட்சுமணனை தேடி வருகின்றனர்.