ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சார்பில் நேற்று கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Update: 2024-05-11 08:00 GMT
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் நேற்று கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாநில துணைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கார்த்தி, பொருளாளர் ராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறைவு, இருப்பு அதிகம் என கூறி பல மடங்கு அபராதம் விதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.