நிலம் அபகரிப்பு என்பது திமுகவின் பிறவி குணம் - ஆர்.பி.உதயகுமார் பேட்டி

கட்சி அலுவலக திறப்பு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்திந்தார்

Update: 2023-12-17 11:08 GMT

கட்சி அலுவலகம் திறப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், வடகிழக்கு பருவமழை குறித்து அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உரிய அறிவிப்பு கிடைக்காததால் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என தனது தோல்வியை நியாயப்படுத்தி எங்கள் மீது குறை கூறுகிறார். அதை மக்கள் ஏற்கவில்லை. 10 ஆண்டுகளில் நாங்கள் தானே புயல் முதல் நிவர் புயல் வரை அனைத்தையும் சந்தித்துள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளோம்‌.

ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளது போதுமானதாக இல்லை. காவிரியின் உரிமை பறிபோனதே கருணாநிதியால்தான். உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தற்போது அவர் அறிவிக்கப்படாத முதல்வராகத்தான் செயல்பட்டு வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். சேலம் மாடர்ன் தியேட்டர் முன்பு கருணாநிதியின் சிலை வைப்பதற்காக இடத்தை அபகரிக்க திமுக முயற்ச்சித்துவருகிறது. நில அபகரிப்பு என்பது திமுகவினருடைய பிறகு குணம். தலைவர் எவ்வழியோ அவர்களின் தொண்டர்களும் அவ்வழியில்தான் செல்வார்கள் என தெரிவித்தார்

Tags:    

Similar News