மனு வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய கோட்டாட்சியர்
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு அளிக்க வந்த மக்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் மரக்கன்றுகளை வழங்கினார்.
Update: 2024-06-21 06:39 GMT
ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நேற்று முதல் வருகிற 27 ம் தேதி வரை வருவாய் தீர்ப்பாயம் என்கின்ற ஜமாபந்தி நடைபெற ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.இதனையடுத்து ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.இதில் ஈரோடு , சோலார் , கதிரம்பட்டி , அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாசியர் சதீஸ்குமார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தோடு மனு வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி நன்றாக பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.