உடல் உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு ஆர்டிஓ மரியாதை
கடையநல்லூரில் சாலை விபத்தில் மூளை சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு தென்காசி ஆர்டிஓ லாவண்யா மரியாதை செலுத்தினார்.;
Update: 2024-06-26 09:16 GMT
அரசு சார்பில் ஆர்டிஓ லாவண்யா மரியாதை
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த கல்யாண சுந்தரம் (47) என்பவர் மதுரை - தென்காசி தேசிய சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை குடும்பத்தினர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்தனர். அவரது உடலுக்கு தென்காசி ஆர்டிஓ லாவண்யா மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான அரசு நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.