மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க தயார் - அதிமுக வேட்பாளர் பேட்டி !

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் இன்று (26-ம் தேதி) நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2024-03-26 11:34 GMT

பசிலியான் நசரேத்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் இன்று (26-ம் தேதி) நாகர்கோவிலில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜாதி மத பாகுபாடின்றி ஆட்சி நடத்தினார். ஆனால் மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசு தற்போது ஊழலில் திளைத்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு இருண்ட காலமாக மாறி உள்ளது .  அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுக -விற்கு தோல்வி தொடங்கிவிடும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். நான் வியாபார ரீதியாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் .மீனவர்கள் மற்றும்  கிறிஸ்தவர்களின் வாக்குகளை பெற்றுவிட்டு தமிழக முதலமைச்சர் அவர்களை ஏமாற்றி வருகிறார். நாகர்கோவில் ரயில் நிலையத்தை மதுரை கூட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நான்கு வழிச்சாலை பணிகளை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொல்லங்கோடு நீரோடி பகுதிகளில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம், கடல் சார் கல்லூரி தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் தேவைப்படும் மீனவ கிராமங்களில் தூண்டில் உள்ள அமைப்பதற்காக நடவடிக்கை எடுப்பேன்.தோவாளையில் நறுமண பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரப்பர் ஆராய்ச்சி மையம் கொண்டு வருவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். தற்பொழுது உள்ள விஜய்வசந்த் எம்.பி. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றவில்லை. திமுக அரசும் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் உள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் கனிமவள  பிரச்சனையில் பொதுமக்களுடன் இணைந்து போராட தயாரா? ஆனால் நான் மக்களுக்காக குரல் கொடுக்க தயாராக உள்ளேன். உங்களில் ஒருவராக இருந்து செயல்படுவேன் .லஞ்ச ஊழல் இல்லாத எம்பி யாக செயல்படுவேன். எனவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News