திருப்பூரில் ஆயத்த ஆடை உற்பத்தி பகுதி நேர பயிற்சி வகுப்பு

திருப்பூர் தொழில் திறனை மேம்படுத்த ஆயத்த ஆடை உற்பத்தி பகுதி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

Update: 2024-06-29 13:46 GMT

ஆயத்த ஆடைகள் 

திருப்பூரில் தொழிலாளர் திறனை மேம்படுத்த ஆயத்த ஆடை உற்பத்தி பகுதி நேர பயிற்சி வகுப்பு! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், நிப்ட்-டீ கல்லூரி இணைந்து பகுதி நேர ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி வகுப்பை புதிதாக தொடங்கியுள்ளது. முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி வளாகத்தில் இதற்கான மையம் அமைந்துள்ளது.

இங்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. அப்பேரல் மெர்சண்டைசிங், குவாலிட்டி கண்ட்ரோல், பேட்டன் மேக்கிங்கில் மேனுவல் மற்றும் கேட் மென்பொருள், ஓவர்லார்ட், பிளாட்லாக் மற்றும் பவர்சிங்கர் அடங்கிய தையல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள பகுதி நேர பயிற்சி வகுப்பில் சேரலாம்.

மெர்சண்டைசிங், குவாலிட்டி கண்ட்ரோல் பிரிவுகளில் சேர பலர் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். பயிற்சி வகுப்பில் சேர்ந்து திறனை மேம்படுத்தலாம் என்று நிப்ட்-டீ பகுதிநேர பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News